Posts

Showing posts from October, 2017

கொண்டரங்கி மலை வரலாறு 16

Image
             கொண்டரங்கி மலை வரலாறு - 16 காமதேனு கொண்டரங்கி மலை உச்சி சென்று பல நாள் முயன்று ,இரவும் பகலும் கொண்டரங்கி சுயம்பு லிங்கத்தை நினைந்து தவம் இருந்து ,இப்போது உலகிட்கு வெளிக்கொணரும் பாக்கியம் வந்து விட்டதை அறிந்து ,ஜன்ம கர்மபலனை ஓரளவு நிறைவேற்றிவிட்டதாகவே எண்ணி மகிழ்ந்தாள் . கொண்டரங்கி ஆண்டவர் மீது பால் அமுதம் பாய்ச்சினாள் . பால் மடி கீழே லிங்கத்தை நோக்கியவாறு வைத்து குனிந்தவாறு மோவாயால்  தன் பால் காம்பை அழுத்த, அழுத்த ,சிவலிங்கமே பாலால் நனைந்து வெண்மை லிங்கமாக காட்சி கொடுத்தது .கொண்டரங்கி ஆண்டவர் காமதேனுவின் பால் அபிஷேகத்தை மனமார ஏற்று கொண்டார் . எப்போதும் தனக்கு இந்த பாக்கியம் கிடைக்க காமதேனு வேண்டினாள் .ஈசன் அவள் நினைத்ததை அறிந்து மகிழ்ந்தார் .இனி கொண்டரங்கி மலையில் காமதேனு என்றும் போற்றப்படுவாள் ...எல்லோராலும் வாழ்த்த படுவாள் .... காமதேனு கொண்டரங்கி மலை மேலே வந்த இடங்கள் காலடிகளாக பொறிக்கப்பட்டு அனைவராலும்   பால் அமுது அபிஷேகமாக ஊற்றி வணங்கப்படுவாள் ..... அவள் என்னை கண்டறிந்த இந்த சித்திரை பௌர்ணமி திருநாள் விமரிசையாக பின்வரும் காலங்களில் கொண்டாடப்படும் .என்பதை எல்லாம்