Posts

Showing posts from April, 2018

கொண்டரங்கி மலை வரலாறு-19

Image
                                         கொண்டரங்கி மலை வரலாறு -19                                                                  எழுத்து - உருவாக்கம் : கொண்டரங்கி தனசேகர்                                                                              நன்றி - திரு ஆனந்த் ( புகைப்பட கலைஞர் )  ( உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள் ... மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க ..)                                காமதேனுவும் அவள் பிள்ளையும் கொண்டரங்கி மலை தம்பட்டம் பாறை தாண்டி சென்று கொண்டு இருந்தனர்.கீரனூர் விவசாயி ஓசை எழுப்பாமல் அவர்களை பின் தொடர்ந்தார் .காமதேனுவையும் அவள் பிள்ளையையும் சத்தமிட்டு நிறுத்தவும் அவருக்கு தோன்றவில்லை. மெல்ல மெல்ல மலை பாதை வழி குறுகலானது..முட்கள் அடர்த்தியாகவும், பாறை சந்து வழ