கொண்டரங்கி மலை வரலாறு 16

             கொண்டரங்கி மலை வரலாறு -16

காமதேனு கொண்டரங்கி மலை உச்சி சென்று பல நாள் முயன்று ,இரவும் பகலும் கொண்டரங்கி சுயம்பு லிங்கத்தை நினைந்து தவம் இருந்து ,இப்போது உலகிட்கு வெளிக்கொணரும் பாக்கியம் வந்து விட்டதை அறிந்து ,ஜன்ம கர்மபலனை ஓரளவு நிறைவேற்றிவிட்டதாகவே எண்ணி மகிழ்ந்தாள் .

கொண்டரங்கி ஆண்டவர் மீது பால் அமுதம் பாய்ச்சினாள் . பால் மடி கீழே லிங்கத்தை நோக்கியவாறு வைத்து குனிந்தவாறு மோவாயால்  தன் பால் காம்பை அழுத்த, அழுத்த ,சிவலிங்கமே பாலால் நனைந்து வெண்மை லிங்கமாக காட்சி கொடுத்தது .கொண்டரங்கி ஆண்டவர் காமதேனுவின் பால் அபிஷேகத்தை மனமார ஏற்று கொண்டார் .

எப்போதும் தனக்கு இந்த பாக்கியம் கிடைக்க காமதேனு வேண்டினாள் .ஈசன் அவள் நினைத்ததை அறிந்து மகிழ்ந்தார் .இனி கொண்டரங்கி மலையில் காமதேனு என்றும் போற்றப்படுவாள் ...எல்லோராலும் வாழ்த்த படுவாள் .... காமதேனு கொண்டரங்கி மலை மேலே வந்த இடங்கள் காலடிகளாக பொறிக்கப்பட்டு அனைவராலும்   பால் அமுது அபிஷேகமாக ஊற்றி வணங்கப்படுவாள் .....

அவள் என்னை கண்டறிந்த இந்த சித்திரை பௌர்ணமி திருநாள் விமரிசையாக பின்வரும் காலங்களில் கொண்டாடப்படும் .என்பதை எல்லாம் எல்லம் வல்ல கொண்டரங்கி மலை ஆண்டவர் சூக்குமமாக அறிந்து வைத்து கொண்டு வாழ்த்தினார் .காமதேனு சுயம்பு லிங்கம் இருக்கும் இடத்தை சுற்றி உள்ள கற்கள் ,சிறு பாறைகள் ,முட்கள் ,சிறுசெடி கொடிகள் எல்லாவற்றையும் சுத்தப்படுத்த நினைத்தாள் .....

கொண்டரங்கி மலை அடிவரத்தில் இருந்து உயர் புண்ணிய லோக ஆன்மாக்கள் காமதேனு கீழே இறங்கி வர சமிக்கினை  ஒலியை கிளியின் கீச்சு குரலாக எழுப்ப , காமதேனு அறிந்து கொண்டாள் ...அடுத்த முறை வரும்போது ஒவ்வொன்றாக சுத்தப்படுத்தலாம் என்று எண்ணி ,மல்லிகார்ஜுனரை ,கொண்டரங்கி ஆண்டவரை ,கொண்டரங்கி சுயம்பை ,எல்லாம் வல்ல ஈசனுக்கு நன்றி கூறி கொண்டரங்கி மலை விட்டு கீழே இறங்க நினைத்தாள் ...காமதேனுவின் மகனும் தன் தலையை சிவலிங்கத்தின் முன் குனிந்து வணங்கினான் ..

காமதேனு ஈசனை பிரிய மனமில்லாமல் சுயம்பு லிங்கத்தையே பார்த்து கொண்டு இருந்தாள் ....காமதேனுவின் பிள்ளை தலையை கீழ் நோக்கி ஆட்டியவாறு கிளியின் கீச்சு குரலை திரும்ப கேட்க செய்தான் ..காமதேனு கொண்டரங்கி ஆண்டவரை வணங்கி விட்டு ,அவ்விடம் விட்டு இருவரும் மலை விட்டு இறங்க ஆரம்பித்தனர் ....வேகமாக கீழே இறங்க ..இறங்க ...எதோ ஒரு சக்தி அவர்களை வேகமாக கீழே இறக்கி விட்டு கொண்டு இருந்தது ...கொண்டரங்கி ஆண்டவர் சூக்ஷமங்களை செய்வது இருவருக்குமே தெரிந்தது ....
மாலை நேரம் சூரிய அஸ்தமன வேளை சந்தியா வேளையாகி  கொண்டு இருந்தது ...

காமதேனு வருவதை தூரத்தில் இருந்து பார்த்த உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் ,மிக்க மகிழ்ச்சி அடைந்தனர் ...அவள் கொண்டரங்கி ஆண்டவரை பார்த்து விட்டாள் என்பதை அவள் கண்களில் தெரிந்தது ...அவளின் ஜன்ம பலன் ஈடேறி விட்டதை அவர்கள் சூக்ஷ்மமாக அறிந்தனர் ...காமதேனு ஒன்றரை நாழிகையில் மலை விட்டு அடிவாரம் வந்தடைந்தாள் ...மற்ற மாடுகளுடன் கூட்டமாக கலந்து நின்றாள்.

மாடு மேய்ப்பவன் காமதேனுவை கண்டவுடனே நிம்மதி பெருமூச்சு விட்டான் ...பல இடங்களில் அலைந்தும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் ...தானாக கூட்டத்தில் இருந்தது அவனின் தேடலை நிறுத்தியது ...
உயர் புண்ணிய லோக ஆன்மாக்கள் காமதேனு அருகிலே சென்று அவளை ஆசிர்வதித்தனர் ....அவள் பிள்ளையையும்
ஆசிர்வதித்தனர்.

மாடு மேய்ப்பவன் எல்லா மாடுகளையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வரிசைப்படுத்தினான் .காமதேனுவையும் அவள் பிள்ளையையும் முன் வரிசையில் நிற்க வைத்து தலைமை படுத்தி வீட்டுக்கு கிளம்பினான் .காமதேனுவை அனைத்து மாடுகளும் தங்களின் காவல் தெய்வமாக வணங்கின .அந்தி சாய்ந்து விட்டது ...கொட்டகைக்குள் எல்லாமாடுகளும் அதனதன் இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டன.

கீரனூர் விவசாயி காமதேனு கொட்டகைக்கு வந்ததை அறிந்து தன் குடும்பத்துக்கு தேவையான பாலை கறக்க காமதேனு இருக்கும் இடம் வந்தார் .மற்ற மாடு மேய்ப்பவர்களும் காமதேனு அருகில் இருக்கும் மாடுகளிடம் பால் கறக்க ஆரம்பித்தனர்.காமதேனுவை கீரனூர் விவசாயி தலையை வருடினார். கழுத்தை தடவியபடி பால் கறக்க உட்கார்ந்தார். பித்தளை பாத்திரத்தை கீழே வைத்து விட்டு ,பால் மடி மேலே நீர் தெளித்து பால் காம்பை இழுத்தார். பால் வரவில்லை ..மீண்டும் அடுத்தடுத்து அழுத்தமாக அழுத்தி  பால் காம்பை இழுத்தார்..ஆனாலும் பால் ஒரு சொட்டு கூட வரவில்லை ....

காமதேனு தான் சக்தியை பயன்படுத்தி பால் தரவும் முனைய வில்லை ...இனி கொண்டரங்கி ஆண்டவருக்கு மட்டுமே தனது பாலமுது கொடுக்கப்படும் என்று வாக்கு எடுத்து கொண்டாள் ...கீரனூர் விவசாயி ஆச்சர்யம் அடைந்தார் ...இது போல பால் கொடுக்காமல் அவள் இருந்தது இல்லை ...மற்ற மாடுகளிடம் பால் கறந்து கொண்டு இருந்த தனது வேலையாட்களை கூப்பிட்டார் ...அனைவருமே காமதேனு இருக்கும் இடம் வந்தனர்.

கீரனூர் விவசாயி காமதேனு மடியில் பால் வராததை சொன்னார் .அனைவருமே காமதேனு மடியில் பால் கறக்க முயற்சி செய்து பார்த்தனர் .ஆனால் யாராலும் ஒரு சொட்டு கூட  பால் கொண்டுவர முடியவில்லை .அனைவருமே செய்வதறியாது நின்றனர் ...

கொண்டரங்கி ஆண்டவர் மலை உச்சியிலே சுயம்பாய் அனைத்தையும் அறிந்து  மௌனமானார்... காமதேனுவுக்கு வரப்போகும்  விளைவுகள் கடுமையாக இருப்பதை அந்த  மௌனம் காட்டியது .

கொண்டரங்கி மலை வரலாறு தொடரும்

Comments

Popular posts from this blog

கொண்டரங்கி மலை வரலாறு-18

கொண்டரங்கி மலை வரலாறு-19

கொண்டரங்கி மலை வரலாறு-12