கொண்டரங்கி மலை வரலாறு-19


                                         கொண்டரங்கி மலை வரலாறு-19

                                 
                              எழுத்து -உருவாக்கம்: கொண்டரங்கி தனசேகர் 
                                      
                                    நன்றி -திரு ஆனந்த்( புகைப்பட கலைஞர்




(உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள்...
மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க ..)

                              



காமதேனுவும் அவள் பிள்ளையும் கொண்டரங்கி மலை
தம்பட்டம் பாறை தாண்டி சென்று கொண்டு இருந்தனர்.கீரனூர் விவசாயி ஓசை எழுப்பாமல் அவர்களை பின் தொடர்ந்தார் .காமதேனுவையும் அவள் பிள்ளையையும் சத்தமிட்டு நிறுத்தவும் அவருக்கு தோன்றவில்லை.

மெல்ல மெல்ல மலை பாதை வழி குறுகலானது..முட்கள் அடர்த்தியாகவும், பாறை சந்து வழியாகவும் ,பெரும்பாறைகள் மேல் தவழ்ந்தும் செல்ல வேண்டி இருந்தது ஆனாலும் இருவரும் பழக்கப்பட்டு செல்லும் பாதையாக மாற்றியது கீரனூர் விவசாயிக்கு தெரியாது.அவருக்குதான் மிகவும் சிரமம் இருந்தது.அவர்கள் இருவரும் சர்வ சாதாரணமாய் சென்று கொண்டு இருந்தனர்.

எந்த நோக்கத்துக்காக செல்கின்றனர்?வேறு விவசாயி யாருக்காவது பாலை கொடுத்து விட்டு தினமும் வருகிறதா ? மலை உச்சி வரை ஏறவேண்டி
வருமோ? அவர்கள் ஏன் என்னை கவனிக்காமல் செல்கின்றனர்?
உண்மையிலேயே அவர்கள் என்னை பார்க்கவே இல்லையா?என கீரனூர் விவசாயி தனக்குள் கேள்வி கேட்டு கொண்டே அவர்களை பின்தொடர்ந்து கொண்டே இருந்தார். 

மலை ஏற ஏற கீரனூர் விவசாயி ஒன்றை மட்டும் கவனித்து கொண்டே வந்தார் அது என்னவெனில், வழியை உருவாக்கியது இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் இருக்க வாய்ப்பு இல்லை ...மனிதர்கள் உருவாக்கும் வழிபாதைக்கும் ,கால்நடைகள் உருவாக்கும் பாதைகளுக்கும் வித்தியாசம் தெரியும் .இதை உருவாக்க பல காலம் பிடித்து இருக்கும் .ஒவ்வொரு முறையும் மேய்ச்சலுக்கு அனுப்பும் போதும் வழியை உருவாக்கி வைத்ததை உணர்ந்தார். 

அவருக்கு இந்த மலை ஏறிவருவது முதல் முறை ஆதலால் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான சூட்சமங்கள் நடப்பதை உணர்ந்து கொண்டே வந்தார் ...பூக்கள் இல்லாமல் பூவாசம் அடித்தது ....சந்தானம் கலந்த ஜவ்வாது மணம் மாறி மாறி வந்தது...மலை ஏற ஏற காற்றின் அசைவுகள் ஒவ்வொரு இடத்துக்கும் தகுந்தமாதிரி இசைவடிவம் எடுத்தது..சில இடங்களில் முற்றிலும் காற்று வாராமல் நிசப்தம் நிலவியது ...எதிர்க்காற்று மலையில் பட்டு திரும்பி சுழன்று மிரட்டியது ..என மலை ஏறும் இடமெல்லாம் மாயங்கள் நடந்து கொண்டே இருந்ததை கவனித்தபடியே இருவரையும் பின்தொடர்ந்தார்.

கொண்டரங்கி மலை ஆண்டவர் இருக்கும் இடத்துக்கு காமதேனுவும் அவள் பிள்ளையும் கிட்ட தட்ட வந்துவிட்டனர் .கொண்டரங்கி மலை ஆண்டவர் காமதேனுவை தன்னுள் ஐக்கியப்படுத்திக்கொள்ள தயாராக இருந்தார்.காமதேனுவும் தன் ஜென்மபலன் நோக்கம் இன்னும் சற்று நாழிகைகளில் நடந்து விடும் என்று நம்பினாள்.

சுயம்பு லிங்க கொண்டரங்கி ஆண்டவர் உலக மக்களுக்கு தன்னை காட்ட சித்திரையில் வரும் பௌர்ணமியில் காமதேனு தன்னை உலகுக்கு அறிமுகப்படுத்துவாள் என்று முன்கூட்டியே கணித்து வைத்து இருந்தார்.
சித்திரை பௌர்ணமி நாள் தான் சுயம்பு லிங்க பிரவேசம் உலகிட்கு இருக்கும் என்பது இருவரின் கணிப்பு.ஆம் அன்று சித்ரா பௌர்ணமி தான்.

தன்னை கீரனூர் விவசாயி மலைஅடிவாரம் முதல் பின் தொடர்ந்து வருவதை கவனித்தாலும் ,அதை கவனிக்காததுபோல காமதேனு ஏறி சுயம்பு லிங்கம் இருக்கும் இடத்துக்கு வந்து விட்டாள்.சுனை நீர் கால்வருடியபடி காமதேனுவை நனைத்து சென்றது ..கால்வலியை குறைத்தது..வற்றாத சுனை நீர் கொண்டரங்கி மலையில் வாழும் கங்கை மாதா தான் ..

கீரனூர் விவசாயிக்கு கால்வலி அதிகம் ஆயிற்று ..முட்கள் காலில் ஏறி ரணத்தை உருவாக்கி ஆத்திரத்தை அதிகமாக்கியது.
அவர் காமதேனு ,அவளின் பிள்ளை மீதும் திடீரென்று ஆத்திரப்பட்டார்.தூரத்தில் சென்று சிறுமரக்கிளையை ஒடித்து கையில் வைத்து கொண்டார் அவளை அடித்தது இல்லை ..ஏனோ அந்த கண நேரத்தில் ஆத்திர மிகுதியால் கம்பை கையில் வைத்த படி இருவரையும் பிடித்து விடலாம் என்று முயட்சித்து விரைவாக மேல் ஏறினார் ..அவர்கள் இருவரும் சுயம்புலிங்கம் இருக்கும் இடம் சென்றுவிட்டனர் ..இந்த மலையில் யாருமே இல்லாத பொழுது தன்னை வருத்தி மேலே ஏறவைத்ததுக்கு கொஞ்சம் ஆத்திரத்துடன் முன்னேறினார் ...


காமதேனு கொண்டரங்கி மலை மல்லிகார்ஜுனர்,சுயம்பு லிங்க ஈசனை கண்டு ஆனந்த கண்ணீர் விட்டாள்.லிங்கம் காமதேனுவின் சக்தியை உறிஞ்ச ஆரம்பித்தது ..அவளின் சுவாசம் மெல்ல மெல்ல ஈசனிடம் சென்று கொண்டு இருந்தது ..வெளிபிராணனை நிறுத்தி வைத்து கொண்டே தன் தலை உச்சி ஜ்யோதியை சுயம்பு லிங்கத்தோடு இணைக்கும் வேலையை செய்தாள்.அவள் லிங்கம் மேல் தன் இறுதி பால் அமுதம் படைக்க லிங்கம் அருகில் சென்றாள்.அந்த இடமே நறுமணமிக்கதாக இருந்தது .சுயம்புலிங்க  ஈசனுக்கு  நேராக தன் பால் அமுதை கொடுக்க சித்தமானாள்.ஈசன் தன் மேல் விழும் பால்அமுதத்தை ஏற்க தயாராய் இருந்தார் .

சுயம்புலிங்க ஈசனுக்கு நேராக தன் பால் அமுதை கொடுக்க காமதேனு சித்தமானாள்.ஈசன் தன் மேல் விழும் பால்அமுதத்தை ஏற்க தயாராய் இருந்தார் .காமதேனு லிங்கம் மீது பால் சொரிய ஆரம்பித்தாள் ...ஈசன் மகிழ்ந்தார் ..அப்போது தான் அந்த விபரீதம் நடக்க தொடங்கியது ..

அந்த விபரீதம்... ஈசனை, சுயம்பு லிங்க ஈசனை ..வெளிக்கொணர்ந்ததா? சுயம்பு லிங்க ஆண்டவரின் அமானுஷ்யத்தின் இறுதி கட்டம் அடுத்த நிறைவுரையில்                 

...நன்றி 



             கொண்டரங்கி மலை வரலாறு-19 நிறைவு





 

 












Comments

  1. நான் திருவாதிரை நட்சத்திரம் மிதுன ராசி நான் Money plant வீட்டில் வளர்க்கலாமா?

    ReplyDelete
  2. Naan magara laknam sir....puthan,sooriyan iruvarum meenathil irukirargal aanal guru viruchagathil irukirar ithanal raja yogam kidaikamal poguma sir???

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கொண்டரங்கி மலை வரலாறு-18

கொண்டரங்கி மலை வரலாறு-12