கொண்டரங்கி மலை வரலாறு-12

                                      கொண்டரங்கி மலை வரலாறு ..


                                                     அத்தியாயம் 12

                            
                                எழுத்து -கொண்டரங்கி தனசேகர்
   

                             

கொண்டரங்கி மலை வீடியோ லிங்க் :https://youtu.be/2zvWdQkTNK4


(உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க ..அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள்...
மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் )    

               
 கொண்டரங்கி மலைக்கு சுவாதிஷ்டான சக்கரமாகவே தம்பட்டம் பாறை இருக்கும் ரகசியம் தேவியாக மாறிய காமதேனு அறிந்தாள்.கொண்டரங்கி ஆண்டவர் ஆக்கினை எனும் ஆக்ஞா சக்கரத்தில் தான் கொண்டரங்கி மலையில் இருப்பார் என்பதையும்  தேவி நிச்சயித்து விட்டாள்.


மனிதர்களுக்கு நெற்றிப்பொட்டில் ஆக்ஞா சக்கரம் இருப்பது
போலவே ,கொண்டரங்கி மலையின் நெற்றிப்பொட்டில் தான் கொண்டரங்கி சுயம்பு ஆண்டவர் மல்லிகார்ஜுனர் இருப்பார் என்பதையும் சூக்ஷம தவத்தால் அறிந்து கொண்டாள்.                        
                                                                                                                                           மனிதர்களுக்கு குண்டலினி சக்தி எனும் நாகம் நம்முடைய முதுகெலும்புக்கு கீழ் சுருண்டு படுத்து கொண்டு உள்ளது .இந்த நாக சக்தியே ஆன்மிகத்திலும் ...யோகமார்க்கத்திலும் முழுமை அடைய உதவுகிறது ...இதை எழுப்பினால் தான் கடவுளை காணும் பார்வை மாறும் ......                       
                                                                                                                                                   குண்டலிணி சக்தி எழுப்பப்பட்டால் உச்சியில் உள்ள சஹஸ்ரம் அடைய ஏழு சக்கரங்களான ....குண்டலி நாகம் படுத்து கொண்டு உள்ள மூலாதாரம்.....
                                                                                                                                                      சூக்ஷ்ம உலகத்துக்கு செல்லும் பாதையை காட்டும் சுவாதிஷ்டானசக்கரம் (மனிதர்களுக்கு தொப்புளுக்கு கீழ் இரண்டு அங்குலத்தில் உள்ளது )                       
                                                                                                                                                        இறையை முழு சக்தியாக நம்முள்  உணரவைக்கும் மணிப்பூரக சக்கரம்(தொப்புள் மையத்தில் உள்ளது ).                                                                                                                                                                                                                                                                                                                                இறையை விசாலமான பார்வைக்கு கொண்டு செல்லும் அநகாதசக்கரம்(நெஞ்சு  குழியில் உள்ளது ).                                                                                                                                                         
இறையை நம்முள் வியாபிக்க செய்யும் விசுக்தி  சக்கரம்  (தொண்டை  குழியில்  உள்ளது).                                                                                                                                            
இறையின் சக்தி விளையாடும் ஆக்கினை சக்கரம்(நெற்றிப்பொட்டில் உள்ளது ).இறையின் சக்தியை பிரம்மமாக மாற்ற செய்யும் சஹஸ்ரம் (உச்சந்தலையில் உள்ளது ). இவற்றை கடந்தால் மட்டுமே மனிதன் தெய்வ நிலை அறிவான்                       
                                                                                                                                                          தேவியாக மாறிய காமதேனு கொண்டரங்கி மலை மூலாதார சக்கரமான மலையின் அடிவாரத்தில் இருந்து ,இப்போது  சுவாதிஷ்டான மையமான தம்பட்டம் பாறை வந்து விட்டாள் ...இனி தேவி மலையில் உள்ள சக்கர மையங்களையும்  கடக்க வேண்டும் ....மலை உச்சியை சஹஸ்ரமாக வைத்து கொண்டால் கொண்டரங்கி மலை நெற்றிபோட்டில் ஆக்கின சக்கரமாக சுயம்பாய் சிவலிங்கம் இருப்பதை தேவி உணர்ந்தாள் ......

சூக்ஷ்ம தவத்தில் இருந்து தேவி இயல்பான காமதேனுவாக மாறினாள் ...காமதேனுவின் மகனும் தவத்தை நிறைவு செய்தான் ....இருவரும் கொண்டரங்கி தியானம் ஒரு புது வித அனுபவங்களை ஏட்படுத்தி உள்ளதை உணர்ந்து கொண்டரங்கி மலை ஆண்டவருக்கு வானம் நோக்கி நன்றி கூறினர் .                       
இருவருமே தவத்தை நிறைவு செய்து விட்டு வீடு திரும்பி விடலாம் என முடிவெடுத்த கணத்திலேயே ...மலை அடிவாரத்தில் இருந்து கிளியின் கிச்சு குரலை உயர் புண்ணிய லோக ஆன்மாக்கள் எழுப்பினர் ..நான்காம் ஜாமம் மத்தி ஆகிவிட்டது ..விரைவில் வீடு திரும்ப வேண்டும் ,அதுவும் யார் கண்ணிலும் படாமல் செல்ல வேண்டும் .வேகமாக கீழே இறங்கினர் ...

உயர் புண்ணிய லோக ஆன்மாக்கள் காமதேனுவை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர் ...சூக்ஷம உலகத்தில் சென்று  வந்ததை ஏற்கனவே அவர்கள் அறிந்தததால் கொண்டரங்கி மலையின் சக்தியை உணர்ந்தனர் .                       
                                                                                                                                                       காமதேனு மலையை விட்டு இறங்கிய பின் உயர்ப்புண்ணியலோக ஆன்மாக்களையும், மத்திம லோக ஆன்மாக்களையும் பார்த்தாள் ...எல்லோரும் அருகில் வந்தனர் .உயர்ப்புண்ணியலோக ஆன்மாக்கள் காமதேனுவை ஆசிர்வதித்தனர் ..மத்திமலோக ஆன்மாக்கள் அவளின் பின்புறம் சென்று வணங்கினர் ...உடனே எல்லாரும் வீடு கிளம்பினர் ..                                     
யாரும் பார்க்காத வண்ணம் சில ஆன்மாக்கள் அவள் செல்லும முன்னரே வழியில் யாருமே வாராத வண்ணம் ஊரினுள் நித்ரா தேவியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் ,யாருமே எழுந்திருக்க இயலவில்லை ...ஆனந்தமாக தூங்கி கொண்டு இருந்தனர் ....காமதேனு வயல் கடந்து ,காடு கடந்து தன் விட்டு கொட்டகைக்கு வந்து விட்டாள்                       
                                                                                                                                                                அங்கு கொட்டகையில் உள்ள அனைத்து மாடுகளும் ,எருதுகளும் ,காமதேனுவை கண்டவுடன் கொம்புகளை மண் மீது வைத்து மரியாதை செலுத்தின .அவள் இங்கு இருக்கும் வரை ,அவளை பார்க்கும் ஒவ்வொரு முறையும் ,வாழ்வின் புண்ணியமான காலமாக கருதினர் ....அஸ்வினி குமாரர்கள் சக்தி அந்த ஐந்தறிவு ஜீவன்கள் இடத்தில் இருந்ததால் ...அவர்களால் எல்லாவற்றையும் காணும் பாக்கியம் இருந்தது ...

காமதேனுவை பொக்கிஷமாக வைத்து கொண்டாடினர் ..அருகில் இருந்த பசுக்கள் அவளையும் அவளின் மகனுக்கும் நாக்கால் தடவி சுத்தம் செய்தன .மலை ஏறிச்சென்ற வலி போக்க கால்களால் தடவின ...அவள் அவர்களின் அன்பை ஏற்று சுருண்டு படுத்து கொண்டாள் ...

காமதேனு மகன் எற்கனவே படுத்து விட்டான் ... காமதேனு கொண்டரங்கி மலை உச்சி நோக்கினாள் .கொண்டரங்கி மலை நெற்றிப்பொட்டில் ஓரு செவ்வர்ண ஒளி மிளிர்ந்தது .காமதேனுவாக மாறிய தேவி ஒளி கண்டாள் ..கொண்டரங்கி ஆண்டவருடன் நெருங்கும் காலம் நெருங்குவதை உணர்ந்தாள் .எல்லாம் வல்ல கொண்டரங்கி ஆண்டவர் காமதேனு வரும் நாளை  சுயம்பு லிங்கமாய் வீற்று எதிர் பார்த்து இருந்தார் . 

 கொண்டரங்கி மலை வரலாறு தொடரும் -அத்தியாயம்12  நிறைவு                                                                                                                                                                        

Comments

Popular posts from this blog

கொண்டரங்கி மலை வரலாறு-18

கொண்டரங்கி மலை வரலாறு-19