கொண்டரங்கி மலை வரலாறு 10

                                      கொண்டரங்கி மலை வரலாறு ..

                                                   அத்தியாயம் 10

                               எழுத்து -கொண்டரங்கி தனசேகர்

(உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க ..அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள்...
மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் )


காமதேனுவும் அவள் மகனும் தம்பட்டம் பாறையில் கோமுகாஸனம்  இட்டு தியானம் செய்ததில் இருவரின் சூக்கும தேகமும் உடலை விட்டு வெளியேறி நின்று சூக்கும உலகத்தினுள் கலந்தனர் ...காமதேனுவுக்கு அப்போது தான் புரிந்தது ..கொண்டரங்கி மலை ஆண்டவர் தன்னை பக்குவப்படுத்த முயட்சி செய்கிறார் என்பதை புரிந்து கொண்டாள் .


சாய்ந்த அந்த தம்பட்டம் பாறையில் அமர்ந்தவாறே அவர்கள் உடல் மட்டுமே இருந்தது .....அவர்களின் உயிர் தேகம் ஒரு அடி மேலே நின்று உடலை விட்டு நின்றது .இது அமானுஸ்யத்தின் உச்ச கட்ட நிலை ...
அவர்களின் சூக்கும தேகம் தவழ்ந்தது ..கிழே விழுவது போல எண்ணங்கள் இருவருக்கும் தோன்றி கொண்டே இருந்தது ...ஆனால் காமதேனு சூக்கும தேகத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முனைந்தாள் ...

காமதேனு மகனின்  சூக்கும தேகம் பாறையோடு மோதியது ..தலை சாய்ந்து ,சுழன்றது .மகன் பாறையொடு மோதும் போது வலியால் தலை துடிக்கும் என்று காமதேனு நினைத்தாள் ....ஓரு வலியும் மகனுக்கு வலித்ததாய் தெரிய வில்லை .தன் தலையை மீண்டும் மீண்டும் பாறையில் மோதிய படி தலையை ஆட்டினான் ..


காமதேனு மகன் பாறைகள் மீது மோதுவதில் ஆர்வம் காட்டினான் .அவனுக்கு இதமாக இருந்தது ..சூக்கும தேகம் வெண் தேகமாய் தம்பட்டம் பாறை மீது சுற்றியது ..இருவரும் ஆனந்த பட்டனர் ....அதிசயமடைந்தனர் ...தங்களை சரியான படி கொண்டரங்கி சுயம்பு வழிநடத்தி கொண்டு இருப்பதை இருவருமே உணர்ந்தனர் .


காமதேனுவின் மகனுக்கு முதல் நாளே சூக்கும உலக பிரவேசம் கிடைத்தது மிகப்பெரும் பாக்கியமாகவே இருந்தது .இன்னும் கொண்டரங்கி சுயம்பு எவ்வளவு சக்திகளை தன்னில் வைத்து இருக்கும் .


காமதேனுவும் ,அவள் மகனும் தம்பட்டம் பாறை விட்டு இன்னும் மேலே சூக்கும தேகத்தில் பறந்தனர் ...பவுர்ணமி சந்திரன் பெரிதாக அவர்களுக்கு தெரிந்தது ...கொண்டரங்கி மலை சூக்கும தேகத்தில் பார்த்த போது லிங்க வடிவில் நீண்டு தெரிந்தது ..வானத்தையும் ,நிலவையும் தொட்டுக்கொண்டு உள்ளது போலே ,நிச்சயமாய் ,சர்வ சத்தியமாக ,தெரிந்தது .


இன்னும் மேலே சென்றனர் ...அவர்களுக்கு எந்த முன் நினைவும் இல்லை .எந்த எண்ணமும் இல்லை ...கொண்டரங்கி மலை தன்னை சுற்றிலும்
ஒரு கவச வளையத்தை வைத்து இருந்ததை கண்டனர் ..அந்த வளையம் கருப்பும் சிவப்பும் கலந்து அடர்த்தியாக மலையை சுற்றி வலம் வந்து கொண்டு இருந்தது .அந்த கருஞ்சிவப்பு  வளையத்தை தாண்டி எந்த துஷ்ட சக்திகளும் ,துர்தேவதைகளும் ,கரும் பைசாசங்களும் நெருங்கி கூட பார்க்க முடியாது .


நட்சத்திரங்கள் வானத்தில் சிதறி விடப்பட்டு நடுவில் பவுர்ணமி சந்திரன் இவர்கள் அருகில் வருவது போல,முகத்தின் முன் சந்திரன் வருவது போலவும் இருவருக்கும் தோன்றியது.கொண்டரங்கி மலை அடிவாரத்தில் நின்ற உயர்புண்ணிய ஆன்மாக்கள் காமதேனுவும் அவள் பிள்ளையும் சூக்கும தேகம் எடுத்து செல்வதை பார்த்து பரவசப்பட்டனர் ...அவர்களும் இணைய விரும்பினர் ..ஆனால் இந்த அமானுஷ்யம் முழுக்கவே கொண்டரங்கி மலை சுயம்பு லிங்க ஈசனே நடத்தி கொண்டு இருப்பதால் ,இறையின் அனுமதி இல்லாமல் நுழைய கூடாது என்பதை உணர்ந்ததால் யாருமே செல்ல வில்லை .


காமதேனுவும் தன் மகனுடன் கொண்டரங்கி மலையை சூக்கும தேகம் கொண்டு சுற்றி சுற்றி வந்தனர் .சூக்கும தேகத்தில் இருந்து கொண்டே கொண்டரங்கி மலை சுயம்பு லிங்கத்தை தேடலாமே என்று நினைத்தாள் ...
அவளுக்கு உடனே இந்த சூக்கும சக்தியை வைத்து எளிதாக தேடி ...விரைவில் கண்டுபிடித்து விடலாம் என்று எண்ணினாள் ...கொண்டரங்கி மலை தாண்டி வான வெளி சென்றவர்கள் கீழே இறங்கினார்கள்.மலை மேல் தவழ்ந்தார்கள்.காமதேனு இப்பொது தம்பட்டம் பாறை இடுக்கில் நுழைந்தாள் ...
ஸ்தூல தேகத்தில் நுழைய முடியாமல் சில நாட்களுக்கு முன் தவித்த காமதேனுவால் இப்பொது சூக்கும தேகத்தில் எளிதாக நுழைய முடிந்தது .சுயம்பு லிங்கத்தை தேட ஆரம்பித்தாள் .

காமதேனு தேட ஆரம்பித்த பொழுது புதிதாய் ஓரு அமானுஷ்யம் நிகழ்ந்தது ..காமதேனு பார்க்கும் இடமெல்லாம் லிங்கமாக தெரிந்தது ...சிறு கற்களும் லிங்கமாக மாறி நின்றது ...பெரும்பாறைகளும் பெரும் சிவலிங்கமாக வீற்று நின்றது ..கொண்டரங்கி மலையில் உள்ள அனைத்து கற்களும் சிவலிங்கமாக தோன்றி காமதேனுவை குழப்பமடைய செய்தது .

கொண்டரங்கி மலை மல்லிகார்ஜுனர் நகைத்தார் ....சுயம்பு லிங்கமாய் வீற்று நகைத்தார். 

கொண்டரங்கி மலை அமானுஷ்யம் தொடரும் ...

அத்தியாயம் 10 நிறைவு.

Comments

Popular posts from this blog

கொண்டரங்கி மலை வரலாறு-18

கொண்டரங்கி மலை வரலாறு-19

கொண்டரங்கி மலை வரலாறு-12