கொண்டரங்கி மலை வரலாறு-11

                                         கொண்டரங்கி மலை வரலாறு

                                                          அத்தியாயம் 11


                                        எழுத்து -கொண்டரங்கி தனசேகர் 



கொண்டரங்கி மலை வீடியோ லிங்க் :https://youtu.be/2zvWdQkTNK4


(உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க ..அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள்...
மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள்)



காமதேனு தம்பட்டம் பாறை இடுக்கில்  சூக்கும தேகத்தில் தேட ஆரம்பித்த பொழுது சிறு கற்களும் லிங்கமாக மாறி நின்றது ...பெரும்பாறைகளும் பெரும் சிவலிங்கமாக வீற்று நின்றது .காமதேனு ஒவ்வொரு சிவலிங்கமாக  கற்களும் ,பாறைகளும் மாறுவதை கண்டு திகைத்தாள்.

 இந்த சூக்கும தேகத்தை வைத்து எளிதாக சுயம்பு லிங்கத்தை தேடி   விரைவில் கண்டுபிடித்து விடலாம் என்று எண்ணியது கொண்டரங்கி மலை ஆண்டவருக்கு விருப்பம் இல்லை என்பது காமதேனுவுக்கு அப்பொது தான் புரிந்தது.

இனி இந்த சூக்கும தேகத்தில் கொண்டரங்கி ஆண்டவரை தேடுவதை நிறுத்தி விட்டு இயல்பான ஸ்தூல தேகத்தில்  கண்டுபிடிப்பது மட்டுமே அவருக்கு பிடித்தமாக இருக்கும் என்று மனதில் சிந்தித்தாள் .இப்படி அவசரப்பட்டு தேட ஆரம்பித்தது பிழையாக எண்ணி கவலை கொண்டாள் . ஆனால் கொண்டரங்கி ஆண்டவர் அதுவும் தம்பட்டம் பாறையில் சூக்கும உலக பிரவேசம் ஏன் எனக்கு அளித்தார் என்பதை  யூகிக்க முயற்சி செய்தாள் .

காமதேனு மகன் தன் சூக்கும தேகத்தில் கொண்டரங்கி சுயம்பு தேடுதலை விட்ட தன் தாயை பார்த்தான் .அவன் தன் தாய் சிந்திப்பதை எளிதாக புரிந்து கொண்டான் .காமதேனு தன் மகனை அழைத்து  தம்பட்டம் பாறையில் தவம்  செய்ய அழைத்தாள் .இருவருமே கோமுகாஸனத்தில் அவர்களின் உடல் மேலே நின்று சூக்கும தேகத்தில்  தம்பட்டம்பாறை ரகசியத்தை வெளிகொணர கொண்டரங்கி மலை ஆண்டவரை வேண்டி தவம் செய்தனர் ....சில நாழிகைகள் ஆனது ...சந்திர ஒளி அவர்களின் சூக்கும உடலை தனது ஆகர்ஷ்ண சக்தியால் சக்தி படுத்தியது .


தவத்தின் போது  தம்பட்டம் பாறை மூலம் சூக்கும உலக பிரவேசம் கிடைத்தது மிகபெரும் பாக்கியமாக கருதினாள் .அதுவும் சாதாரண மனிதர்களுக்கு கிடைக்காத  இந்த பாக்கியத்தை ஐந்தறிவு படைத்த எனக்கு கொடுத்த கொண்டரங்கி சுயம்பு அருளை நினைத்து ஆனந்தபட்டாள்.


காமதேனு தன்னை கோ(பசு ) ரூபத்தில் இருக்கும்போது ஐந்தறிவு ஜீவனாகவே நினைத்தாள்.ஆனால் காமதேனு பற்றி அனைத்து தேவர்களும், ரிஷிகளும், யோகிகளும் உயர் புண்ணிய லோக ஆன்மாக்களும் உலகத்துக்கு பசி போக்கும் ஜெகன் மாதாவாகவே கருதி வணங்கினர் .அவள் சகல உயிர்களையும் காக்கும் அன்னபூரணி. சிவத்தின் அம்சம் ...அவள் சக்தியின் வடிவம் ........அவள் தேவியின் அவதாரம்.

இருவரின் தவமும் தீவிரமானது .உச்சகட்ட மோட்ச நிலைக்கு செல்ல நினைத்த போது தான்   அமானுஷ்யங்கள் தோன்ற ஆரம்பித்தன .காமதேனு சக்தி வடிவானாள் ....தேவியின் அம்சமாக மாறினாள் ...ஐந்தறிவு உயிர் சக்தி ஆறறிவு உயிராய் மாறி  தேவலோக சக்தியாக நின்றாள் .கைலாயத்தில் சுற்றியது ஓரளவு நினைவு வந்தது ...

 சூக்கும தேகத்தில், தவத்தில் இருந்த காமதேனுவுக்கு இப்போது
சிறுகற்கள் ,பெரும்பாறைகள் ,எல்லாம் ஒரே லிங்கமாக  பிரதானமாக மாறி கொண்டரங்கி மலை வடிவில் நின்றது .

கொண்டரங்கி மலை லிங்க ரூபமாய்,முழுவதுமான சிவலிங்க ரூபமாய் -விஸ்வரூபம் காட்டி நின்றது. தேவியாக மாறி நின்ற காமதேனு இன்னும் உயிர்சக்தியின் வேகத்தை அதிகப்படுத்தினாள் ......

இன்னொரு அமானுஸ்யமாக  ஒரு செவ்வண்ண மலையில் இருந்து வரும் அளப்பரிய சக்தி அலைகள்  இருவரின்  சூக்கும தேகத்தையும் இழுத்து சென்றது.இருவரும் சூக்குமத்தில் இதை உணர்ந்து விட்டனர் .

சிவப்பான ஒரு பேரொளி வளையத்துக்குள் சிக்கியதாக உணர்ந்தனர் .அந்த மலை செவ்வண்ணத்தில் நிரம்பி இருந்தது.தங்க வேலின் ஒளி பொன்னிறமாக ஜொலித்து வானுக்கும் அந்த மலைக்கும் செங்குத்தாக நின்றது.அதில் ஈர்க்க பட்ட பல சித்த பெருமக்களும் ,யோகிகளும் ,உயர் புண்ணிய லோக ஆன்மாக்களும் அந்த மலையை சுற்றி சுற்றி அந்த பவுர்ணமி இரவில் கிரிவலம் வந்தனர் .

அந்த மலையை ஏற்கன்வே காமதேனு கண்டு இருந்தாள் ...அந்த மலை ஸ்கந்த சக்தி நிரம்பி வழியும் பழநி மலை .இப்பொது சூக்கும லோகத்தில் பார்க்கும் போது உலகத்தில் நடந்து கொண்டு இருக்கும் அனைத்து நிகழ்வுகளின் மறு பக்கம் தெரிந்தது .காமதேனு சூக்கும தேகத்தில் பழநி மலை மிக அருகில் தெரிந்தது ...ஊனக்கண்ணில் பார்த்தவைகள் எல்லாம் மாறி தெரிந்தது .அதில் உண்மை இருந்தது.

அவள் மீண்டும் தம்பட்டம் பாறை தவத்தை தொடர்ந்தாள்.தம்பட்டம் பாறை தேவியின் தவத்துக்கு அதிர்ந்தது ...பிறப்புக்கு முன்னாலும் ,இறப்பிட்கு பின்னாலும் நடக்க இருக்கும் அமானுஷ்யங்கள் இங்கு தவம் செய்யும் போது கிடைப்பதை தேவி உணர்ந்தாள் .

மனிதர்களின் எழுசக்கரங்களில் ஒன்றான சுவாதிஷ்டானம் விழித்து கொள்வதை கவனித்தாள் ...சுவாதிஷ்டானத்தை இந்த தம்பட்டம் பாறை விழிப்படையச்செய்யும் ரகசியத்தை உணர்ந்தாள்.

இந்த சுவாதிஷ்டான சக்கரமாகவே கொண்டரங்கி மலையில் உள்ள தம்பட்டம் பாறை விளங்குவதை நினைத்து பரவசப்பட்டாள் .வரும் காலங்களில் சித்த பெருமக்கள் சூக்கும தேகங்களை மாற்றி கொள்ளும் கூடு விட்டு  கூடு பாயும் வித்தையை இங்கு படு சூக்ஷமமாக இங்கு நிகழ்த்த விருப்பதை தேவி ஞானத்தில் அறிந்தாள் .  

கொண்டரங்கி மலைக்கு சுவாதிஷ்டான சக்கரமாகவே தம்பட்டம் பாறை இருக்கும் ரகசியம் அறிந்தாள். கண்டிப்பாக கொண்டரங்கி ஆண்டவர் ஆக்கினை எனும் ஆக்ஞா சக்கரத்தில் தான் கொண்டரங்கி மலையில் இருப்பார் என்பதையும்  அவள் நிச்சயித்து விட்டாள்.

மனிதர்களுக்கு நெற்றிப்பொட்டில் ஆக்ஞா சக்கரம் இருப்பது
போலவே ,கொண்டரங்கி மலையின் நெற்றிப்பொட்டில் தான் கொண்டரங்கி சுயம்பு ஆண்டவர் மல்லிகார்ஜுனர் இருப்பார் என்பதையும் தவத்தால் அறிந்து கொண்டாள்.

கொண்டரங்கி மலையில் சுயம்பு லிங்கமாய் மறைந்து இருக்கும் மல்லிகார்ஜுனர் ,தான் இருக்கும் இடத்தை தேவியாக மாறிய காமதேனு தவத்தில் அறிந்ததை உணர்ந்தார் ...உள்ளம் மகிழ்ந்தார் ...                     

தேவியாக மாறிய காமதேனுவின்  தேடுதல் சூக்ஷம தேகத்தில் இன்னும்  தொடரும் .

கொண்டரங்கி மலை வரலாறு -  அத்தியாயம் 11-நிறைவு .







Comments

Popular posts from this blog

கொண்டரங்கி மலை வரலாறு-18

கொண்டரங்கி மலை வரலாறு-19

கொண்டரங்கி மலை வரலாறு-12