கொண்டரங்கி மலை வரலாறு-9 

                           கொண்டரங்கி மலை வரலாறு-9



                                                அத்தியாயம் 9

        
                                எழுத்து -கொண்டரங்கி தனசேகர்

                                              



(உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க ..அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள்...
மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் )


                  
காமதேனு இன்றைய இரவில் ஓரு புதிய அமானுஷ்ய உலகத்தில் செல்ல கொண்டரங்கி ஆண்டவர்  தனக்கு உதவி செய்வார் என்று திடமாக நம்பினாள் .தன் மகனை கொண்டரங்கி தம்பட்டம் பாறையில் தேட சொன்னால் அங்கு சுயம்பை பற்றி ஏதாவது ஒரு சூக்ஷமம் கிடைக்கும் என்றும் நம்பினாள் .

அன்றைய நாளும் வந்தது .பவுர்ணமி இரவை எல்ல உயர் புண்ணிய லோக ஆன்மாக்களும் எதிர்பார்த்து இருந்தன ...
அவர்களுக்கும் இன்று ஏதோ ஒரு அமானுஷ்யம் நடக்கும் என்று அவர்களும் நம்பினார்கள் .காமதேனுவின் மகன் கொண்டரங்கி மலை செல்ல படு ஆர்வமாய் இருந்தான் ... கொண்டரங்கி மலையை கொட்டகையில் இருந்தபடி அவ்வப்போது காமதேனுவின் மகன்  பார்த்து வியந்து கொண்டே இருந்தான் .


காமதேனு தன் மகனின் கண்களை பார்த்தாள் .அவனும் தன் தாயை பார்த்தான் . தான் தாய்க்கு மிகப்பெரும் பாக்கியத்தை இன்று செய்ய போகிறோம் என்பதை மகன் புரிந்துகொண்டான் .தன்னுடைய  காலடி கொண்டரங்கி மலை மேல் படும்போது படப்போகும் உணர்வுகளை எண்ணி  மகிழ்வடைந்து கொண்டு இருந்தான் ....

இரவு வேலை வந்தது .கீரனூர் விவசாயி காமதேனு இருக்கும் இடமே வந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என பார்த்து ..கட்டை இறுக்கமாக கட்டிவிட்டு போனார் .காமதேனுவுக்கு துணையாய் இருந்து கொண்டு இருக்கும் உயர் புண்ணிய லோக ஆன்மாக்கள் கவனித்து நகைத்தனர் ...காமதேனு அவரின் கவனிப்பையும் ,பராமரிப்பையும் கண்டு மகிழ்வடைந்தாள் ...
ஆனால்  எனது ஜென்ம பிறப்பு ரகசியம்  அவருக்கு தெரியாது.  அவர் வீட்டுக்கு உள்ளே சென்று படுத்து கொண்டார் .


இரண்டாம் ஜாமம் முடிய சில நாழிகைகள் இருந்தன .காவல்காரனும் கொட்டகையை சுற்றி பார்த்து விட்டு வெளியே சென்று விட்டான் .இப்போது யாருமே காமதேனுவை கவனிப்பவர் இல்லை .உயர் புண்ணிய லோக ஆன்மாக்கள் சமிக்கினை செய்தனர் ...அதில் உள்ள ஒருவர் கருப்பு நிற நாயாக மாறி முன்னோக்கி செல்ல ஆரம்பித்தார் ..காமதேனு லேசாக தலை ஆட்டி முன் செல்ல கட்டு அவிழ்ந்தது ...கட்டை பலமாக போட்டாலும் அவள் சக்திக்கு இது எல்லாம் ஒன்றும் இல்லை ...

மகனும் கட்டை அவிழ்த்தான் ...எல்லோரும் கொண்டரங்கி மலை கிளம்பினர். வயல்வெளிகளை கடந்தனர் ....தூரத்தில் இருந்து கொண்டு பைசாசங்கள் அவள் செய்யப்போகும் சூக்ஷம விஷயங்களை கவனிக்க தொடங்கின ....

கொண்டரங்கி மலை அடிவாரம் காமதேனுவும் ,அவள் மகனும் வந்து சேர்ந்தனர் .காமதேனு மகன் கொண்டரங்கி மலை மேல் வட்ட திகிரியாய் நின்ற பவுர்ணமி சந்திரன் மலையை சுற்றி சந்திர காந்த அலைகளை பொழிந்து கொண்டு இருந்தான் .கொண்டரங்கி மலையும் சந்திர காந்த அலைகளை தன்னுள் உறிஞ்சி வஜ்ரமாக நின்றது .


காமதேனு தலையை மண் மீது வைத்து கொண்டரங்கி மலைக்கு மரியாதை  செலுத்தியது ...காமதேனு மகனும் கொண்டரங்கி மலைக்கு மரியாதை செலுத்திவிட்டு தாயோடு கொண்டரங்கி மலை ஏறுவதுக்கு தயார் ஆனான் .
உயர் புண்ணிய லோக ஆன்மாக்கள் ஆசிர்வாதம் வழங்கினர் ....மத்திம லோக ஆன்மாக்கள் காமதேணுவின் பாதம் பணிந்தனர் .

தாயும் மகனும் கொண்டரங்கி மலை ஏற ஆரம்பித்தனர் .காமதேனு மகன் கொண்டரங்கி மலை ஏற ஏற எதோ ஒரு புதிய சூக்கும உலகத்துக்கு  செல்வது
போல உணர்ந்தான் .

பத்து நாழிகை நேரம் தேடிவிட்டு பின்னர் வந்து விடவேண்டும் என்று உயர் புண்ணிய லோக ஆன்மாக்கள் சொன்னது நினைவுக்கு்   வந்தது .எட்டு நாழிகையில் அவளுக்கு மலை அடிவாரத்தில் இருந்து கிளியின் கீச்சுக்குரல் சமிக்கினை ஆக  அனுப்புவதாக சொன்னதை மனதுள் ஞாபக படுத்தி கொண்டாள் .


எங்கும் முட்களும்,சிறு சிறு கற்களும் மலை ஏறும் வழி முழுவதும் மீண்டும் நிறைந்து இருந்தது .அவைகளை எல்லாம் இருவரும் அப்புறப்படுத்தி கொண்டே சென்று கொண்டு இருந்தனர் .காமதேனுவின் மகன் வாயால் வேகமாக ஊதிகொண்டு தடத்தின் மேல் உள்ள சிறு பூச்சிகளை தள்ளி விட்டு மேல் நோக்கி சென்றனர் .பாறை இடுக்குகளில் காமதேனு செல்லும் பொது லாவகமாக உள்ளே புகுந்து சென்றாள்.சென்ற முறை போல் வயிற்று கீறல் ஆகாத வண்ணம் திட்டமிட்ட நகர்வாக நகர்ந்தாள் .


தம்பட்டம் பாறை இருக்கும் இடம் இருவரும் வந்தடைந்தனர் .காமதேனுவின் மகன் அந்த பெரிய பாறையை பார்த்து வியந்தான் .பௌர்ணமி இரவில்அந்த பாறை பார்க்க இருபுறமும் மிருதங்க வடிவில் ,காற்று உள்போகும் போது ஒலி வேகமாக  எதிரொலித்த வண்ணம் இருந்தது . காமதேனு மகனை நோக்கினாள்.


தம்பட்டம் பாறை இடுக்கில் நுழையுமாறு தலை ஆட்டினாள் .தம்பட்ட வடிவ பாறையின் அடியில் சுயம்பு லிங்கம் இருக்குமோ ? என அவளுக்கு சென்ற முறை வரும் போது சந்தேகம் இருந்தது .காமதேனுவால் பாறை இடுக்கில் நுழைய முடியாத காரணத்தால் தான் தன் மகனை அழைத்து வந்து இருந்தாள்.மகன் புரிந்து கொண்டான் .தன் தாய் இதன் காரணமாகவே தன்னை அழைத்து வந்து இருப்பதாக புரிந்து கொண்டு பாறை இடுக்கில் நுழைந்தான்.அவனுக்கும் நுழைய சிரமம் இருந்தது .ஆனால் மெல்ல மெல்ல கோமுக ஆசனம் போட்டு தவழ்ந்தான் .உள் சென்று கொண்டரங்கி மலை சுயம்பை தேடினான் .


மூச்சு காற்றில் ஒரு வித்தியாசமான வாசனை வருகிறதா என இருவரும் கவனித்து கொண்டே இருந்தனர் .ஆனால் அப்படி பட்ட எந்த வாசனையையும் அவர்கள் உணர்ந்ததாக தெரிய வில்லை .காமதேனுவை மகன் எதுவும் கிடைக்காத நிலையில் ஏக்கமாக பார்த்தான்.தேடல் வீணாகிப்போனோதோ என எண்ணினான் .ஆனால் காமதேனு மட்டும் இந்த இடத்தில ஏதோ ஒரு அமானுஷ்யம் இருப்பதாகவே எண்ணினாள்.கண்களை மூடி ஈசனை தியானித்தாள்.தன் மகனையும் தியானிக்க சொன்னாள்.


இருவரும் தம்பட்டம் பாறையில் கோமுகாசனம் போட்டு தியானித்தனர்.சில நாழிகைகள் சென்றன ...அவர்களுக்குள் ஒரு அமானுஷ்ய மாறுதல் நிகழ்ந்தது  -உள்ளே இருந்த உயிர் சக்தி உடலை விட்டு வெளியேறி ஒரு அடி மேல் நின்றது .அவர்கள் தங்கள் சூக்கும தேகம் பறப்பதை உணர்ந்தனர் .....காமதேனுவின் சூக்கும தேகத்தை மகனும் ,மகனின் சூக்கும தேகத்தை காமதேனுவும் கண்டனர் .இது அமானுஸ்யத்தின் உச்ச கட்ட படி நிலை .

(கொண்டரங்கி மலை வரலாறு தொடரும்) .



அத்தியாயம் 9 நிறைவு


Comments

Popular posts from this blog

கொண்டரங்கி மலை வரலாறு-18

கொண்டரங்கி மலை வரலாறு-19

கொண்டரங்கி மலை வரலாறு-12