கொண்டரங்கி மலை வரலாறு 13

              கொண்டரங்கி மலை வரலாறு ..

                            அத்தியாயம் 13

              எழுத்து -கொண்டரங்கி தனசேகர்

(உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க ..அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள்...
மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் )

[காமதேனுவின் தம்பட்டம்பாறை அமானுஸ்யங்கள் பற்றி எற்கனவே வாசகர்கள் படித்து இருப்பீர்கள் .

இனி ..

இரவு நேரத்தில் தம்பட்டம்பாறையில் இருந்து திரும்பிய காமதேனு மீண்டும் கொண்டரங்கி மலை செல்லும்  நாளை எதிர்பார்த்து கொண்டு ,காலம் நிகழ்த்த போகும் மாயாஜாலத்தை எண்ணி சுயம்பு லிங்கத்தை வெளிகொணரும் நாளை எதிர் பார்த்து கொண்டு இருந்தாள் .

கீரனூர் விவசாயி குடும்பம் காமதேனுவை கண் அகலாது பூஜித்து வந்தனர் .காமதேனுவால் விவசாயி குடும்பம் நல்ல நிலை அடைந்து சகல பாக்கியங்களையும் அடைந்தனர் .
காமதேனுவுக்கு இரவு நேரத்திலே கொண்டரங்கி மலை சுயம்பை தேடுவதை காட்டிலும் பகல் நேரத்திலே தேடினால் நன்றாக இருக்கும் என்று உயர் புண்ணிய லோக ஆன்மாக்கள் விரும்பின .காமதேனுவும் பகலில் கொண்டரங்கி மலையை ரசிக்க விரும்பினாள் .

காமதேனுவின் விருப்பத்தை அறிந்து கொண்ட உயர் புண்ணிய லோக ஆன்மாக்கள் அவளை பகலிலே கொண்டரங்கி மலை சென்று வருவதட்க்கு உண்டான வழிமுறைகளை தங்களுக்கே உண்டான சூக்ஷம வழிகளை பின்பற்றினர் ...

உயர் புண்ணியலோக ஆன்மாக்களின் சூக்ஷமங்கள் வேலை செய்தது ...காமதேனு திடீரென நோய்வாய் பட்டாள் ...உயர் புண்ணியலோக ஆன்மாக்கள் மகிழ்ந்தனர் .காமதேனுவும் பகலிலே தன்னை வெளிவிடும் நாளை எதிர்பார்த்து இருந்தாள் ....

கீரனூர் விவசாய குடும்பம் மிக்க கவலை அடைந்தது .வெளியூரில் இருந்து வந்து மருத்துவம் பார்க்கப்பட்டது. எந்த மருந்து கொடுத்தாலும் கேட்கவில்லை .
என்ன செய்வது என அவர்களுக்கு தெரிய வில்லை .கீரனூர் விவசாயி ஓரு முடிவெடுத்தார் அது என்னவெனில் காமதேனுவை பகலிலே மேய்ச்சலுக்கு அனுப்பினால் அவளே தனக்கான மருந்தை எதாவது ஒரு மூலிகை கீரை உண்டு சரிப்படுத்தி கொள்வாள் என நினைத்தார் ..
அவருக்கு கனவுகளும் அப்படிதான் வந்தது.

அந்த கனவுகளையும் புண்ணிய லோக ஆன்மாக்களே உருவாக்கினர் .கீரனூர் விவசாயி காமதேனுவை அழைத்து கொண்டு மேய்ச்சலுக்கு வெளியே  கிளம்பினார் .....காமதேனுவை அவளுடைய போக்கில் விட்டு விட்டார் ...அவளும் சோர்ந்து போலவே நடித்து கொண்டரங்கி மலை நோக்கி முன்னேறினாள் .ஆங்காங்கு சில புற்களையும் ,கீரைகளையும் சாப்பிடுவதுபோல் பாசாங்கு செய்து கொண்டரங்கி மலை அடிவாரம் சுற்றியுள்ள காடுகளில் செல்ல ஆரம்பித்தாள் ..

கீரனூர் விவசாயி, காமதேனு தனக்கான மூலிகை மருந்தை
இங்குள்ள காடுகளில் எடுத்து விடுவாள் என நம்பிக்கை அடைந்தார் .அதட்கு தகுந்தது போலவே புண்ணிய லோக ஆன்மாக்களே மூலிகை மருந்தை காமதேனு செல்லும் இடத்தில் முன்கூட்டியே வைத்து காமதேனுவிடமும் சொல்லி விட்டனர் .

காமதேனு மூலிகை மருந்து வைக்க பட்ட இடம் வந்ததும் சாப்பிட ஆரம்பித்தாள் ..கீரனூர் விவசாயி அவள் சாப்பிடும் மூலிகையை ஒரு சிறு கொத்து எடுத்து கைக்குள் வைத்து கொண்டார் ..காமதேனு மூலிகையை சாப்பிட ஓரளவு பலம் அடைந்ததை கீரனூர் விவசாயி பார்த்தார் .காமதேனு சாப்பிட்டுவிட்டு படுத்து விட்டாள் .கீரனூர் விவசாயியும் அங்கே படுத்து விட்டார் ......சிலநேரம் கழித்து காமதேனு எழுந்து தலை ஆட்ட கழுத்து சலங்கை ஒலி சத்தம் கேட்டு அவரும் எழுந்து விட்டார் .இருவருமே  நன்றாக உறங்கியதால்  மாலை ஆகிவிட்டது .

கீரனூர் விவசாயி அந்த மூலிகை கீரையை எடுத்துக்கொண்டு வைத்தியரிடம் வந்து காட்டினார் .காமதேனு இந்த மூலிகை கீரையை உண்டதாகவும் ,இப்போது அவளின் உடல்நலம் சீராக இருப்பதாகவும் தெரிவித்தார் ..வைத்தியர் மோர்ந்து பார்த்து விட்டு ...இந்த மூலிகை அபூர்வமானது என்றும் ....இங்கு விளைவதும் அபூர்வமானது என்று ...சொன்னதும்  கீரனூர் விவசாயி சந்தோசபட்டர் .இனி தினமும் காமதேனுவை கொண்டரங்கி மலை அடிவாரம் மேய்ச்சலுக்கு அனுப்பி அவளின் தீராத வியாதியை குணப்படுத்தலாம் என்றும் முடிவெடுத்தார் ...

காமதேனுவும் ,உயர் புண்ணிய லோக ஆன்மாக்களும் தங்கள் எண்ணம் நிறைவேறியதை நினைத்து மகிழ்ச்சி கொண்டனர் .கீரனூர் விவசாயி  ஒவ்வொரு நாட்களில் காமதேனுவுடன் வருவதாகவும்   மற்ற நாட்களில் வேலையாட்களில் முதன்மை பெற்ற ஒருவனை காமதேனுவுடன் அனுப்பலாம் என்றும் வீட்டினரிடம் சொன்னார் ...எவ்வாறோ காமதேனு உடல்நிலை சரியானால் போதும் என்ற முடிவில் விவசாயி குடும்பம் இருந்ததால் ,காமதேனுவை பகலிலே மேய்ச்சலுக்கு அனுப்ப அந்த வீட்டு பெண்களும் சம்மதித்தனர்.

காமதேனு சில நாட்களுக்கு பகலிலே மேய்ச்சலுக்கு கிளம்பினாள் .தகுந்த நேரத்தை எதிர்பார்த்து கொண்டு இருந்தாள் .உயர் புண்ணிய லோக ஆன்மாக்களும்  அவள் மீண்டும் கொண்டரங்கி மலை ஏறும் நேரத்தை திட்டமிட்டனர் .அப்படிப்பட்ட ஒரு நாள் வந்தது .கீரனூர் விவசாயியின் முதன்மை வேலையாள் மற்ற பசுமாடுகளோடு ,காமதேனுவையும் ,அவள் பிள்ளையையும் மேய்ச்சலுக்கு விட்டு விட்டு மரத்தடியில் உட்கார்ந்து கவனித்து கொண்டு இருந்தான் .அவனுக்கு ஏனோ அன்று பகலிலே நித்திரை அளவுக்கு அதிகமாக வந்து ,தூங்கியே விட்டான் .உயர் புண்ணிய லோக ஆன்மாக்கள் காமதேனுவுக்கு சமிக்கினை செய்தனர் .

காமதேனு கொண்டரங்கி மலைக்கு  பகலிலே  மலை ஏறும்  தருணமும் வந்து விட்டது.கொண்டரங்கி மலை உச்சியை பார்த்தாள் ...கொண்டரங்கி மலை சுயம்பு லிங்க மல்லிகார்ஜுனர் காமதேனுவாக மாறிய  தேவி தன்னை உலகிட்கு காட்ட போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை உணர்ந்தார் .

கொண்டரங்கி மலை வரலாறு தொடரும்.

13அத்தியாயம் நிறைவு

Comments

Popular posts from this blog

கொண்டரங்கி மலை வரலாறு-18

கொண்டரங்கி மலை வரலாறு-19

கொண்டரங்கி மலை வரலாறு-12