கொண்டரங்கி மலை வரலாறு 14

கொண்டரங்கி மலை வரலாறு ..
                 அத்தியாயம் 14
              எழுத்து -கொண்டரங்கி தனசேகர்
(உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க ..அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள்...
மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் )
மாடுகளை  மேய்க்க வந்த கீரனூர் விவசாய குடும்பத்தின் முதன்மை வேலையாள் கொண்டரங்கி மலை அடிவாரம் அசதியால் ஆழ்ந்து தூங்கியே விட்டான் .உயர்ப்புண்ணிய லோக ஆன்மாக்கள் காமதேனுவுக்கு சமிக்கினை செய்த அடுத்த வினாடியே அவள் கொண்டரங்கி மலை ஏற ஆரம்பித்தாள் .
அவளுடனே அவள் பிள்ளையும் மலை ஏற ஆரம்பித்தான். இருவருமே வேகமாக ஏற ஆரம்பித்தனர் ....இந்தமுறை கொண்டரங்கி மலை உச்சி வரை செல்ல வேண்டும் என்று மனதுள் சங்கல்பம் எடுத்து ஏறிக்கொண்டு இருந்தாள் .உயர்ப்புண்ணிய லோக ஆன்மாக்களும் ,மத்திமலோக ஆன்மாக்களும் இன்று கொண்டரங்கி மலை  சுயம்பு லிங்கமாக எழுந்தருளி இருக்கும் மல்லிகார்ஜுனரை காமதேனு தரிசித்துவிட்டு உலகிட்கு வெளிக்கொணர வாழ்த்தினர் ...ஆசிர்வதித்தனர் .
காமதேனு ஒன்றரை நாழிகையில் தம்பட்டம் பாறை அடைந்தாள் ...இதட்கு முன் நடந்த தம்பட்டம் பாறை அமானுஷ்யங்களை நினைத்து பார்த்து மகிழ்ந்து இருவருமே அவ்விடத்தை கடந்தனர் ....இனிமேல் தான் இருவருக்குமே சோதனை ஆரம்பித்தது ....பெரும்பாறைகள்,வெட்டுப்பாறைகள் ,
முட்செடிகள் எல்லாம் மறித்து நின்றன.
பெரும்பாறைகள் மீது ஏறி கடக்க வேண்டும் ...முட்களை அப்புறப்படுத்த வேண்டும் ...முட்ச்செடிகளுக்குள் செல்லும்  போது லாவகமாக நெளிந்து செல்ல வேண்டும் ...பாறை மேல் ஊன்றி தாவ வேண்டும் ...தெளிவான பாதை இல்லை ...காமதேனுவும் அவள் பிள்ளையும் லாவகமாக இவற்றை எல்லாம் தாண்டி மேலே சென்று கொண்டே இருந்தனர் ...
அவர்கள் பெரும்பாறைகளை  தாண்டும் போதும் ,நெளிந்து பாறை இடுக்கில் வழியாக செல்லும் போதும் ...எதோ ஒரு சக்தி அவர்களை உந்தி தள்ளி கொண்டே இருந்தது ....காமதேனு புரிந்து கொண்டாள் ....  ...இந்த அமானுஷ்யத்தை கொண்டரங்கி மல்லிகார்ஜுனர் சூக்குமமாக தன் கணங்களை வைத்து நம்மை  மேலே கொண்டு வர நினைக்கிறார் என்பதை அறிந்து கொண்டாள்.
அவருக்கு தாம் மேலே வருவது தெரிந்து விட்டது ...சுயம்பு லிங்க பிரவேசம் விரைவில் உலகுக்கு தெரிய வரும் நாள் வெகு தொலைவில் இல்லை .
கொண்டரங்கிமலை  பகுதியில் ஏறும் போது சூக்ஷம சக்திகள் வெளிப்பட ஆரம்பித்தன.. தம்பட்டம் பாறை கொண்டரங்கி மலைக்கு சுவாதிஸ்டான சக்கரமாக
செயல்படுவது போல மையப்பகுதியில் உள்ள ஒரு சோலை போன்ற இடம் வெப்பமாக இருந்ததை காமதேனு உணர்ந்தாள் ...இந்த சோலை கொண்டரங்கி மலைக்கு மணிப்பூரக சக்கரமாக விளங்குவதை அறிந்து அதிசயத்தாள் .மனிதருக்கு தொப்புள் ஸ்தான மையத்தில் மணிபூரகம் சக்கரம் உள்ளது போலவே கொண்டரங்கி மலைக்கு  சோலை வனம் மணிபூரகம் .
சோலை வனத்தை கடந்தனர். மலை இப்போது செங்குத்தாக நின்று அசாத்திய வடிவத்தில் நின்றது ...செங்குத்துமலை கடக்க ஆரம்பித்த சில வினாடிகளில் காற்று படு வேகமாக வீச ஆரம்பித்தது .கண்கள் மேல் மோதி கண்களை திறக்க விடாத அளவுக்கு வேகம் காற்றில் இருந்தது .நடுமலையில் காமதேனுவும் ,அவள் பிள்ளையும் உலகம் போற்றக்கூடிய சுயம்பு லிங்க மல்லிகார்ஜுனரை வெளிக்கொணர வேண்டி போராடிக்கொண்டு இருந்தனர்.
காற்றின் வேகம் மலை மேல் பட்டு எதிர் வேகமாய் இருவரின் மீதும் மோதியது ..காமதேனுவின் பிள்ளை மிகுந்த சிரமப்பட்டு ஒவ்வொரு அடியாக எடுக்க வைக்க வேண்டியதாயிற்று ....மூன்று நாழிகை நேரம் ஆகிவிட்டது. கொண்டரங்கி மலை ஆண்டவர் இந்த பலத்த காற்று வீசுவதன் சூக்ஷமத்தை உணரவே  நம்மை ஏறவிடாமால் வைக்கிறார் என்பதை காமதேனு அறிந்தாள் .
பிள்ளையை நிற்க சொன்னாள் .பிள்ளை நின்று தாயை பார்த்தான். காமதேனு கண் மூடினாள்.
இந்த பலத்தகாற்று  சொல்லும் விஷயம் அறிந்தாள். இந்த பகுதி கொண்டரங்கி மலைக்கு காற்று மையமாக திகழும் அனாகத சக்கர மையம் என்பதை அறிந்த பொழுது காற்று அடங்கி மிதமாக வீச ஆரம்பித்தது.இந்த  பகுதியின் மகத்துவம் அறியவே கொண்டரங்கி ஆண்டவர் சூக்ஷம விளையாட்டை விளையாடி உள்ளார் என்பதை அறிந்து பரவசப்பட்டாள். மனிதருக்கு நெஞ்சு பகுதியில் அனாகத சக்கரம்  உள்ளது போல கொண்டரங்கி மலைக்கு இந்த காற்று மோதும் இந்த பகுதி அனாகத சக்கரமாக உள்ளது .
இன்னும் மேலே செல்ல காற்று கொஞ்சம் அடங்கி வழிவிட்டது ....காமதேனுவுக்கு இப்போது ஒரு விஷயம் புரிந்தது ...என்னவெனில் மனிதர்களுக்கு ஏழு சக்கரங்கள் உள்ளது போலவே கொண்டரங்கி மலைக்கும் ஏழு பகுதிகள் சக்கரங்களாக இயங்குகின்றன ....
கொண்டரங்கி மலை அடிவாரம் மூலதாரமாக எடுத்துக்கொண்டால் ..தம்பட்டம்  பாறை சுவாதிஸ்டான மையமாகவும் ...சோலைவனம் மணிபூரகமாகவும் ....அதட்கு மேல் பலத்த காற்று வீசும் பகுதி அநாகதமாகவும் (தற்போது இந்த இடம் மாமியார் மயிர்பிடி என்று ஊர்மக்களால் அழைக்க படுகிறது ).....அப்படி என்றால் மலையின் இன்னும் மூன்று சக்கர மையங்கள் உள்ளது ....அதில் கொண்டரங்கி ஆண்டவர் சுயம்பு லிங்கமாக ஆறாவது சக்கரமான ஆக்கினையில் தான் இருப்பார் ....இப்பொது நான்காவது சக்கரத்தை கடந்து விட்டோம் ...அடுத்து விசுக்தி சக்கரமையம் எனும் நீர்மையம் ....நீரூற்றாகவோ.... நீர் வற்றாத இடமாகவோ.. இருக்க வேண்டும் .
அதை கண்டால் கண்டிப்பாக கொண்டரங்கி மலை ஆண்டவர் சுயம்பு லிங்கமாய் அந்த நீர் ஊற்றின் அருகில் தான் இருப்பார் என்பதை காமதேனு சூக்ஷ்ம அறிவால் அறிந்து கொண்டாள்.காமதேனு வேகமாக பாறைகளை கடந்தும் ...தாவியும் மலை மேலே சென்றபடியே இருந்தாள்.
மலை மேல் இருந்து பூமி  பார்த்தாள் .....கொண்டரங்கி மலையின் விஸ்வரூபம் என்னவென்று அறிந்தாள் ....நீர்மையத்தை தேடி காமதேனுவின் கண்கள் சுற்றின ....இன்னும் மேலே ஏறினாள் ...கொண்டரங்கி மலையின் கழுத்து பகுதியாக உள்ள இடத்தில் தான் நீர்மையம் இருக்க வேண்டும் .
அவள் மேலே செல்ல செல்ல லேசாக காற்றின் தூறல் சற்று தூரத்தில் வந்து கொண்டு இருந்தது ....அந்த இடம் நோக்கி முன்னேறினாள் ....மலை இடுக்கின் நடுவே நீர் சுரந்து பாறைகளின் மேலே வழிந்து ஓடிக்கொண்டு இருந்தது ...
காமதேனு சரியான வழியில் தன்னை கொண்டரங்கி மலை ஆண்டவர் கொண்டு செல்வதை நினைத்து ஆனந்தமடைந்தாள் ...அந்த சுனை நீர் கால்களின் வழியே தவழ்ந்து ஓடும் போது கங்கை காலில் பட்டது போல உணர்ந்தாள் ....
கொண்டரங்கி மலைக்கு இந்த இடமே நீர்மையமாய் திகழும் விசுக்தி சக்கரம் என்பதை அறிந்து கொண்டரங்கி மலையின் மகத்துவம் அறிந்தாள் ...இனி கொண்டரங்கி ஆண்டவர் சுயம்பு லிங்கமாக இந்த இடத்தின் அருகிலே தான் எழுந்தருளி இருப்பார் என்று நினைத்த அக்கணமே காமதேனு துள்ளினாள் ....அவள் பிள்ளையும் துள்ளி விளையாடினான் ...
எல்லாம் வல்ல கொண்டரங்கி மலை ஆண்டவர் ,காமதேனு கை எட்டும் துரத்தில் இருப்பதை நினைத்து மகிழ்ந்தார் ...அந்த மகிழ்வில் பல பொருள் பொதிந்து இருப்பதை யாருமே அறிந்திருக்க வாய்ப்பு இல்லை .
கொண்டரங்கி மலை வரலாறு தொடரும் ...

Comments

Popular posts from this blog

கொண்டரங்கி மலை வரலாறு-18

கொண்டரங்கி மலை வரலாறு-19

கொண்டரங்கி மலை வரலாறு-12