கொண்டரங்கி மலை வரலாறு 15


                  கொண்டரங்கி மலை வரலாறு ..

                                             அத்தியாயம் 15

                         எழுத்து -கொண்டரங்கி தனசேகர்


(உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க ..அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள்...
மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் )


காமதேனு கொண்டரங்கி மலை உச்சிக்கு செல்லும் பாதையில் ஒவ்வொரு சக்கரங்களையும் யோக நிலையில் அறிந்தாள்.இப்போது கொண்டரங்கி ஆண்டவர் சுயம்பு லிங்கமாய் இருக்கும் இடத்துக்கு அருகில் வந்துவிட்டதை உணர்ந்தாள் .கொண்டரங்கி ஆண்டவர் மலையின் ஆக்கினை சக்கரத்தில் தான் எழுந்தருளி இருக்க வேண்டும் என்பதை நீர் சுனை அருகில் வந்தவுடன் உணர்ந்தாள் .

இந்த சுனையே நீர் மையமாக யோகிகள் போற்றும் விசுக்தி சக்கரமாக உணர்ந்தாள் .அடுத்த ஆக்கினையில் எழுந்தருளி உள்ள மல்லிகார்ஜுனரை தேட ஆர்வப்பட்டாள்.

சுனையில் இருந்து நீர் ஒரு சிறு குகை போன்ற இடத்தில இருந்து வெளியே வந்து கொண்டு இருந்தது .அந்த குகை சுனை இருக்கும் இடம் தாண்டினாள்.அங்கு தான் மிக பெரும் சவால் காமதேனுவுக்கு இருந்தது. பல சிறு பாறைகள் மறித்து நின்றது .எல்லா பாறைகளும் அவளின் கால் அளவிட்கு இருந்தது .அவள் சிந்தனையில் இந்த பாறைகளின் கீழ் தான் சிவலிங்கம் மறைந்து இருக்க வேண்டும் .இத்தனை கற்களையும் அப்புறப்படுத்தினால் மட்டுமே வழி கிடைக்கும் .காமதேனு தன் மகனை பார்த்தாள்.மகன் தாயின் என்ன ஓட்டத்தை புரிந்து தன் தலையால் பாறைகளை  ஒவ்வொன்றாக  நகர்த்த பார்த்தான் .காமதேனுவும் இப்போது தன் சிறு தலை கொம்புகளை கொண்டு பாறைகளை பெயர்த்து பார்த்தாள் .அவளால் மிகவும் சிரமமாக இருந்தது .உலகிட்கு கொண்டரங்கி ஆண்டவரை வெளிக்காட்ட இருவரும் மலை மேல் போராடி கொண்டு இருந்தனர்.

ஒரு சில பாறைகள் மட்டுமே சரிக்க முடிந்தது .அதன் இடுக்குகளில் இருவரும் நுழைந்து சென்றனர் .இவ்வளவு பாறைகளையும் சரித்து விட்டு செல்வதென்றால் நீண்ட நேரம் ஆகும் என்பதால் காமதேனு மிகுந்த மன வேதனையில் ஆழ்ந்தாள் . கொண்டரங்கி மலை விட்டு இறங்கி மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் மேலே ஏறி பார்களை பெயர்த்து சரித்து என்று நினைத்தாலே என்று காமதேனு எண்ணும் நேரத்தில் ஒரு தெய்விக மணம் லேசாக வர தொடங்கியது .

காமதேனு அந்த மணத்தை அறிய தொடங்கினாள் .இந்த மணம் சுயம்பு லிங்கத்தில் இருந்து வரும்  தெய்விக நறுமணம் .காமதேனு காற்றில் வரும் அந்த மணத்தை பின்தொடர்ந்தாள் .அந்த பாதையில் உள்ள பாறைகளை மட்டுமே அப்புறப்படுத்தினாள்.வேறு பாதை சற்று மாறினாலும் மணம் வரவில்லை .கொண்டரங்கி ஆண்டவர் சூக்கும விளையாட்டை விளையாட ஆரம்பித்து விட்டார் என்பதை உணர்ந்து மகிழ்ந்தாள் .

தாயும் பிள்ளையும் பாறைகளை சரித்து இருட்டான ஒரு குகை பக்கம் நுழைந்தனர் .அந்த குகை சரியான வடிவம் இல்லாமல் மிக குறுகலான வழியில் செல்வது போல இருந்தது .உள்ளே வெளிச்சம் மிக குறைவாகவே இருந்தது .காற்றில் தெய்விக நறுமணம்  அதிகரித்து கொண்டே இருந்தது .காமதேனு சுயம்பு லிங்கத்தின் அருகில் வந்து விட்டதை உணர்ந்தாள் .அவளின் ஜென்ம ரகசியத்தின் நோக்கம் நிறைவேறும் வேளை நெருங்கி விட்டதை உணர்ந்தாள் .
அந்த குகையில் உள்ள சிறு பாறைகளை சாய்த்து போட்டு உள்ளே முன்னேறினாள்.அவளுக்கு அப்போது இன்னொரு வாசம் வருவதை உணர்ந்தாள் .அது நாக தேவதையின் வாசம் .கொண்டரங்கி ஆண்டவர் மல்லிகார்ஜுனர் சுயம்பு லிங்கமாய் இருக்கும் இடத்தில் ஒரு பெரிய நாகம் இருக்க வேண்டும் என்பதை அறிந்தாள் .ஒரு சிறு நீண்ட கோள் வடிவம்   போன்ற கல்லில் சுற்றிக்கொண்டு நீண்டதாக கழுத்தை திருப்பி காமதேனுவையும் அவள் மகனையும் பார்த்தது .அந்த நாகம் பார்க்க பருத்து , அந்த இருளிலும் தோல் தங்கமாய்  மின்னி ,கண்கள் கூரிய நோக்கில் ,படம் எடுத்து முன்னும் பின்னும் ஆடி அவர்களை பார்த்தது .

காமதேனு கண் மூடி தவநிலையில் நின்றபோது ஈசனோடு நாகம் கழுத்தை சுற்றிக்கொள்ளும் காட்சி வந்தது.நாகம் சுற்றி இருப்பது சுயம்பு லிங்கத்தை தான் என்பது அவளுக்கு இப்போது புரிந்து விட்டது.நாகதேவதை சுயம்பு லிங்கத்தை அடி முதல் மேல் வரை லிங்கம் தெரியாத அளவிட்கு பின்னி பிணைத்து கொண்டு தன் வழவழப்பான மேனியை லிங்கத்தின் மேல் சுற்றி முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு இருந்தாள்.காமதேனு நாகத்தின் கண்களை நோக்கினாள்.
நாகம் மெல்ல காமதேனுவை பார்த்து சீறியது.அந்த சீறல் பல விஷயங்களை காமதேனுவுக்கு காட்டியது .இதுவரை தான் மட்டுமே பார்த்து அரவணைத்து போற்றிய கொண்டரங்கி சுயம்பு லிங்கத்தை, காமதேனு தேடி வந்து உலகிட்கு காட்டும் வேளையை அறிந்து கொண்டு சுயம்பு லிங்கத்தில் இருந்து நாக தேவதை இறங்க ஆரம்பித்தாள்.நாக தேவதை இறங்க ஆரம்பித்த உடனே  கொண்டரங்கி மலை ஆண்டவர் மல்லிகார்ஜுனர் சுயம்பு லிங்கத்தில் ஜொலிக்க ஆரம்பித்தார்.

காமதேனுவின் கண்களில் கண்ணீர் சொரிய ஆரம்பித்தது .அவள் மண்டியிட்டாள் .தன் தலையை நிலத்தில் மேல் வைத்து அவரை வணங்கினாள்.தன் ஜென்ம நோக்கம் ஈடேறியது கண்டு உவகை அடைந்தாள் .கொண்டரங்கி ஆண்டவர் காமதேனுவையும் ,அவள் மகனையும் கண்டார் .அவளின் கடும் போராட்ட தேடுதலில் தன்னை கண்டறிந்ததை நினைத்து பரவசப்பட்டார் .

காமதேனு லிங்கம் இருக்கும் அருகில் வந்தாள்.தன் நாக்கினால் லிங்கம் முழுவதும் சுத்தப்படுத்தினாள்.சுயம்பு லிங்கம் சிறிய அளவில் தரையோடு ஊன்றி இருந்தது .லிங்கத்தை சுற்றி உள்ள சிறு மண் துகள்களை காற்றால் ஊதினாள்.தன் தலையை லிங்கத்தோடு தடவினாள்.அப்படி தடவும் போது சிவத்தோடு ஒன்றி சென்ற  முன்ஜென்ம   உணர்வு முன் வந்தது .இப்போது  காமதேனு சுயம்பு லிங்கத்தை தன் நான்கு கால்களுக்கு நடுவில் கொண்டு வந்து ,தன் பால் மடியை சிவலிங்கத்தின் மேலே நிறுத்தினாள்.

காமதேனுவின் பிள்ளை  அந்த ஆனந்த காட்சியை காண தயாராய் இருந்தான் .காமதேனு  தலையை பின்புற கால்களுக்கு மத்தியில் நுழைத்து தன் பால் மடியை வாயால் அழுத்தினாள்.அந்த மாடி காம்பில் இருந்து ஆகாய கங்கையை போல பால் அமுதம் சிவலிங்கத்தின் மேலே கொட்டியது .மேலும் அழுத்த சுயம்பான சிவ லிங்கத்தில் பால் அபிஷேகம் சிரசில் இருந்து முழுவதுமாக நனைந்தது .கொண்டரங்கி ஆண்டவர் தன்னை வெளி உலகிட்கு காமதேனு காட்டப்போகும் நாளை நினைத்து பார்த்தார் .அந்த நினைவில் தான் பல அமானுஷ்யங்கள்   மறைந்து இருந்தன .


கொண்டரங்கி மலை வரலாறு தொடரும்

Comments

Popular posts from this blog

கொண்டரங்கி மலை வரலாறு-18

கொண்டரங்கி மலை வரலாறு-19

கொண்டரங்கி மலை வரலாறு-12