கொண்டரங்கி மலை வரலாறு-17

                                                கொண்டரங்கி மலை வரலாறு-17

                                 
                              எழுத்து -உருவாக்கம்: கொண்டரங்கி தனசேகர் 





(உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள்...
மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள்
என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க ..)


 காமதேனு கொண்டரங்கி மலை சென்று மல்லிகார்ஜுன ஸ்வாமிக்கு பால் அமுதை அபிஷேகமாக பாய்ச்சி தன் ஜென்ம பிறப்பின் கடனை நிறைவேற்றி கொண்டாள்.ஆனால் இந்த கடன் மூலம் தான் தனக்கு பெரும் பிரச்னை வரும் என்பதை அறிவாள்.கீரனூர் விவசாயி காமதேனுவின் மடியில் இருந்து ஒருசொட்டு பால் கூட கறக்க முடிய வில்லை .


காமதேனு தன் பிள்ளையுடன் மேய்ச்சலுக்கு சென்று திரும்பும்போது எல்லாம் பால் வருவதே இல்லை .காமதேனு ஒவ்வொரு முறையும் மேய்ச்சலுக்கு அனுப்பும் போதும் அவள் கொண்டரங்கி மலை ஏறி சுயம்பு லிங்கமாய் வீற்று இருக்கும் மல்லிகார்ஜுனருக்கு பால் அமுதை கொடுத்து கொண்டே இருந்தாள் .


மாடு மேய்ப்பவனிடம் விழிப்பாக இருக்க சொல்லி பல முறை கீரனூர் விவசாயி சொல்லியும் ,அவனும் காமதேனுவை கண்காணித்தாலும், ,காமதேனு அவன் கண்ணை மறைத்து சென்று பால் அமுதை லிங்கத்துக்கு கொடுத்து விட்டு வந்து விடுகிறாள் .


உயர் புண்ணிய லோக ஆன்மாக்களும் மாடு மேய்ப்பவனை நித்ரா தேவியை விட்டு களைப்படைய செய்து உறங்க வைத்து விடுகின்றனர் .மாடு மேய்ப்பவன் எழுந்திருக்கும் போது காமதேனு தன் பிள்ளையுடன் கொண்டரங்கி மலை ஏறி ஆறு நாழிகையில் திரும்பி வந்து அவன் முன்னாள் புற்களை மேய்ந்த படி இருப்பாள் .மாடு மேய்பவனும் சரியாகவே தான் அவளை கண்காணிப்பதாக நினைத்து விடுவான் .


இப்படியே ஒரு மாத காலம் ஆனது .இதனிடையில் வைத்தியர்களையும் வைத்து காமதேனுவை முழுவதுமாக பரிசோதனை செய்தாலும், வருபவர்கள்  அனைவரும்  அவளின் உடலில் எந்த பிரச்னையும் இல்லை என்பதையே சொல்லி கொண்டு  வந்தனர் .கீரனூர் விவசாயி குழப்பமான சூழ்நிலை அடைந்தார் .


காமதேனு, கீரனூர் விவசாயி கவலை அடைந்ததை நினைத்து வருத்தப்பட்டாள். ஆனாலும் அவளால் இப்போது ஒன்றும் செய்ய இயலாத நிலைமையில் உள்ளாள் .எல்லாம் வல்ல கொண்டரங்கி ஆண்டவரை உலகத்துக்கு காட்டும் நாள் நெருங்கி வருவதை அறிந்தாள்.இனி அவள் ஒரு சொட்டு பால் கூட கீரனூர் விவசாயி குடும்பத்துக்கு தர முடியாத சூழலில் உள்ளதை அவள் அறிவாள்.


தன் ஜென்ம பிறப்பின் ரகசியம் விரைவில் தெரிய வரும் என்பதையம் காமதேனு அறிவாள்.  கொண்டரங்கி மலை மீது தினமும் ஏறி திரும்பி வரும்போது வழி தடத்தை கொஞ்சம் அகலப்படுத்தி வைத்தாள்.பின்வரும்  காலங்களில் மக்கள் கொண்டரங்கி ஆண்டவரை தரிசிக்க  மலை பாதை தடத்தை அவள் போகுமளவு உருவாக்கினாள்.போகவே முடியாத இடங்களை எல்லாம் அவள் கொஞ்சம் சமதளபடுத்தி நடுக்கும் அளவு செய்தாள்.


காமதேனுவின்  பிள்ளை தினமும் காமதேனு பால் அமுதை கொண்டரங்கி ஆண்டவருக்கு அளிக்கும் போது லிங்கத்தில் இருந்து வழிந்தோடும் பால் அபிஷேகத்தையே குடித்து மோக்ஷத்தை அடைந்து கொண்டு இருந்தான் .....அவனுக்கு லிங்க அபிஷேகம் குடித்ததால் நாள் முழுவதும் பசியும் இல்லை ,களைப்பும் இல்லாமல் அரோக்கியமாகவே  இருந்தான் .இதுவும் கீரனூர் விவசாயிக்கு குழப்பத்தை ஏட்படுத்தியது.


தாய் மடியில் பால் வரமால் பிள்ளை எப்படி ஆரோக்கியமாகவே உள்ளான்.மற்ற பசுக்களிடமும் அவன் பால் குடிப்பது இல்லை .அவன் தாய் மடியில் பால் குடித்ததை பார்த்து பல நாள் ஆகி விட்டது .தாயிடம் பாலை  குடிக்காமல் ஆரோக்கியமாக இருக்க முடியாது .

இப்படி ஒரு வித்தியாசமான நடை முறை சிக்கலை கீரனூர் விவசாயியால் கண்டு பிடிக்க முடிய வில்லை அவரால் காமதேனுவிடம் கடுமையாக நடக்கவும் முடியாமல் தவித்தார் .அவரின் குடும்பமும் கவலையில் தோய்ந்து நின்றது .அவளை தங்கள் விட்டு மகா லக்ஷ்மியாகவே பாவித்தனர் .அவளின் பால் அமுதை தங்களுக்கு மட்டுமே பயன்படுத்தினர் இப்போது அவளின் பால் பாக்கியம் கிடைக்காமல் ஏங்கினர்.

கொண்டரங்கி ஆண்டவர்  விரைவில் தனக்கு நல்வழி காட்டுவார் என்று தீர்க்கமாக காமதேனு நம்பினாள்.எல்லாம் வல்ல கொண்டரங்கி ஆண்டவர் நடப்பதும் நடக்க போவதையும் அறிந்த படியால் ,அவளின் ஜென்ம பிறப்புக்கு மோக்ஷம் அளிக்க முடிவெடுத்தார் . தன்னை வெளியுலகத்துக்கு காட்ட வந்த காமதேனுவை  அவர் தன்னுள் எப்போதும் வைத்து கொள்ள முடிவெடுத்தார் .



காமதேனுவும் கொண்டரங்கி மலையை இரவும் பகலும் தூக்கமில்லாமல் உச்சியை பார்த்து கொண்டே இருந்தாள் .அவள் இப்போது சமாதி நிலைக்கு  செல்வதை மற்ற பசுக்கள் கண்டுகொண்டன .அவளை அனைவரும் மண்டியிட்டு தொழுதனர் காமதேனு தன்னை வருத்தி கொண்டே இருந்து லிங்கத்தோடு ப்ரணமயமாக ஐக்கியப்படுத்தி இந்த பூமி விட்டு செல்ல முடிவெடுத்தாள்.


அவளின் கண்கள் மேல்நோக்கியபடியே எப்போதும் இருந்தது .வயிறு சுருங்க விட்டு இருந்தாள் .தன் மூச்சை வெளி பிராணனோடு கலந்து கொண்டே இருந்தாள் .இதய துடிப்பை சில கணங்கள் நிறுத்தி வைத்து சூக்கும உலக சக்தியோடு தொடர்பு கொண்டாள்.அவளை சுற்றி ஒளிவளையம் இருந்ததை உயர் புண்ணிய லோக ஆன்மாக்களும் ,மற்ற உயிரினங்களும் பார்த்து கொண்டு இருந்தனர் .



சூக்கும உலகில் வாழும் பைசாசிக சக்திகளும் ,தீய பாவ ஆன்மாக்களும் ,கொள்ளிவாய் சக்திகளும் ,மோகினிகளும் அந்த ஒளியை தூரத்தில் கண்டு அவைகளும் தங்கள் பாவங்களை போக்கி கொண்டது .அந்த பூத சக்திகளும் காமதேனுவினை  நேரில் ஒருமுறையாவது காண  ஆவல் பட்டது .மத்திம லோக ஆன்மாக்களை அவைகள் தொடர்பு கொண்டு தங்கள் இழி பிறவி கடனை தீர்க்க காமதேனுவை தரிசிக்க வாய்ப்பு கொடுக்குமாறு கெஞ்சின .


மத்திம லோக ஆன்மாக்கள் உயர் புண்ணிய லோக ஆன்மாக்களிடம் தொடர்பு கொண்டு சொன்னனர்.உயர்ப்புண்ணிய லோக ஆன்மாக்கள் காமதேனுவை தொடர்பு கொண்டு சூக்கும சக்திகள் காண விழைவதாக சொன்னனர்.காமதேனு சூக்கும சக்திகளையும் ,பூத கணங்களையும் இறுதியாக தான் கொண்டரங்கி மலை ஏறும் போது பார்க்கலாம் என்று சொல்ல சொன்னாள்.


சில தினங்களில் இது நடக்கும் என்பதையம் சொன்னாள் .உயர் புண்ணிய லோக ஆன்மாக்கள் சூக்கும சக்திகளிடமும் ,பூத கணங்களிடமும்
சொன்னனர் .அவைகள்  தங்கள் இழி பிறவியில் இருந்து  விமோசனம் அடையும் நாளை எண்ணி  தவமிருந்தனர் .


அந்த நாள் வந்தது பொழுதும்  புலர்ந்தது .இன்று காமதேனுவை தான் மேய்ச்சலுக்கு கொண்டுபோவதாக கீரனூர் விவசாயி தன் குடும்பத்திடமும் மாடு மேய்பவனிடமும் சொன்னார்.காமதேனு இதனை கேட்டாள்.கொண்டரங்கி ஆண்டவரோடு ஐக்கியமாகும் நாள் வந்ததை உணர்ந்தாள் .இன்று நடக்க போகும் நிகழ்வுகள் வரும் காலத்தில் வழிவழியாய் மக்கள் வரலாற்றாக மாற்றுவார் என்பதை
உணர்ந்தாள் .


காமதேனுவின் பார்வை கொண்டரங்கி மலை மீது உள்ள ஈசனை
நோக்கியது .கொண்டரங்கி ஆண்டவரும் சுயம்பு லிங்கமாய் வீற்று இன்று காமதேனுவுக்கு பிறவி மோக்ஷம் கொடுக்க தயாராய் இருந்தார் .அந்த நன்நாளை விரைவில் காண்போம் அன்பர்களே .....

   நன்றி ......













Comments

Popular posts from this blog

கொண்டரங்கி மலை வரலாறு-18

கொண்டரங்கி மலை வரலாறு-19

கொண்டரங்கி மலை வரலாறு-12